நோர்வேயின் ராணி சோன்யா தனது அதிகாரப்பூர்வ அரச குடும்ப அந்தஸ்தை இழந்தார்


கடந்த ஆகஸ்ட் மாதம் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு காலமானதைத் தொடர்ந்து, ராணி சோன்யா அந்நாட்டின் அரச குடும்ப இணையதளத்தில் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினராகப் பட்டியலிடப்படவில்லை என ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

89 வயதான ராணி சோன்யாவின் உருவப்படம் தற்போது “அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள்” என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளதாக நார்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய மன்னர் எட்டாம் ஹாக்கான், அவரது மனைவி ராணி மெட்டே-மாரிட் மற்றும் பட்டத்து இளவரசி இங்க்ரிட் அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் மட்டுமே அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

நார்வே அரச குடும்பத்தின் விளக்கத்தின்படி, ஆளும் மன்னர், அவரது துணைவியார் மற்றும் அரியணைக்கான அடுத்தடுத்த வாரிசுகள் ஆகியோர் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர்.

இதன்படி, ராணி சோன்யாவுடன் மன்னரின் மகளான இளவரசி மார்த்தா லூயிஸ் மற்றும் 20 வயதான இளவரசர் ஸ்வெர்ரே மேக்னஸ் ஆகியோரும் அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இளவரசர் ஸ்வெர்ரே மேக்னஸ், பட்டத்து இளவரசி இங்க்ரிட் அலெக்ஸாண்ட்ராவுக்கு அடுத்ததாக அரியணை வாரிசுரிமைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும், மன்னர் ஹரால்டின் மறைவுக்குப் பின்னர், ராணி சோன்யாவை அழைக்கும் மரியாதைக்குரிய பட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச தம்பதியினருக்கு மட்டுமே 'மாட்சிமை' என்ற மரியாதை அழைப்பு பயன்படுத்தப்படுவதாக நார்வே ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments